அரியலூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்
Jul 09 2025
23

அரியலூர், ஜூலை 7-
அரியலூர் மாவட்ட மக்களுக்கு அரசின் திட்டங்கள் சேரும் வகையில், ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி, 15 நாட்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரியலூர் மாவட்டத்தில் ஜூலை 15, 17, 22, 24, 25, 29, 30, 31, ஆக.1, 5, 6,7,8,12,14 ஆகிய தேதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 36 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முகாம் நடைபெறும் நாள், அம்முகாம்களில் பங்குபெறும் வார்டுகள் மற்றும் ஊராட்சிகள் குறித்த விபரங்கள், தன்னார்வலர்கள் வாயிலாகவும், ஆட்டோ விளம்பரம் வாயிலாகவும் தெரிவிக்கப்படும். இந்த முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்குச் சென்று, தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் ்எனத் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?