சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக மாற்றி அரசா ணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சோ. சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்பதோடு, அத்திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான திட்டமாக மாற்றி விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பெறப்பட்ட ஊழியர்களின் 10 சதவீத நிதியினை, ஊழியர்களின் பொது வைப்பு நிதிக்கு மாற்றி, 6 மாதத்திற்கு ஒருமுறை முன்பணம் பெறும் வசதி வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது வட்டி யுடன் முழுத் தொகையையும் வழங்க வேண்டும். ஊழியர் களிடமிருந்து, ஓய்வூதியம் வழங்குவதற்காக ஊதியத்தி லிருந்து 10 சதவீத நிதி பிடித்தம் செய்தல் கூடாது. முழு ஓய்வூ தியம் பெறுவதற்கு குறைந்தபட்ச ஆண்டுகள் நிர்ணயிக்கக் கூடாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தில் கம்யூடேஷன் தொகை (தொகுத்துப் பெறும் தொகை) பெறும் வசதி வழங்கப்பட வேண்டும். ஊழியர் அல்லது ஓய்வூதியர் இறந்தால், இறப்பிலிருந்து 7 ஆண்டு அல்லது 65 வயது - இதில் எது முதலில் வருகிறதோ அதனை கணக்கில் கொண்டு, வழக்கம் போல் 100 சதவீத ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?