சென்னை, ஜன. - தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை புதிய முயற்சியாக வாட்ஸ்அப் வழியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த சான்றி தழ்களைப் பெற அரசு அலுவல கங்கள் மற்றும் மருத்துவமனை களை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. பொது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறு வனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் படி, தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ் அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களைப் பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் வாட்ஸ் அப் நிறு வன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரி கள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பி பெறலாம் என்று மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றி தழ்கள் கிடைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். சான்றிதழ் தொ டர்பான ஆவணங்களையும் பதி வேற்றம் செய்ய வேண்டும். பொது மக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப் படும்” என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?