ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் மாயம்! தேடும் பணி தீவிரம்!!
Jan 11 2026
12
விஜயவாடா: ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா ரெட்டி (24) என்பவர் அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலையில் எம்எஸ் படித்து வந்த நிலையில், அவரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலாஸ்காவுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட தனியாக சுற்றுலா சென்ற ஹரி, டிச.31ஆம் தேதியன்று காணாமல் போனதாகவும், அவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
டெக்ஸாஸிலிருந்து டிச.22ஆம் தேதி தனியாக சுற்றுலா புறப்பட்ட ஹரி, டெனாலி என்ற இடத்தில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். அங்கிருந்து, டிசம்பர் 31ஆம் தேதி அவரது தொடர்பு எண்ணுக்கான சிக்னல் கடைசியாகக் கிடைத்துள்ளது.
அதன்பிறகு அவர் எங்குச் சென்றார் என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அவரது நண்பர்கள், உள்ளூர் காவல்துறை உதவியுடன் காணாமல் போன ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவரது புகைப்படத்துடன் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் அவரைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அலாஸ்காவில், டிச.31ஆம் தேதி வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்துள்ளது. இதுபோன்ற காலநிலையில் பயணிகள் பெரும்பாலும் அலாஸ்கா செல்ல மாட்டார்கள். ஆனால், ஹரி ஏன், அலாஸ்காவை தேர்வு செய்தார், தனியாக சுற்றுலா செல்ல முடிவு செய்தது ஏன் என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
வானிலை மிகவும் மோசமடைந்தாலும், அபாயகரமான சறுக்கு விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் இங்கு அதிகம் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?