அதிர்ஷ்டம் இருந்தால் தான் ஏழுமலையான் தரிசனமா? - ரூ.10,500 டிக்கெட்டுகளில் கூட ஆன்லைன் குலுக்கல் முறை

அதிர்ஷ்டம் இருந்தால் தான் ஏழுமலையான் தரிசனமா? - ரூ.10,500 டிக்கெட்டுகளில் கூட ஆன்லைன் குலுக்கல் முறை


 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோ​யிலில், ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்​ஜித சேவை​கள், ஸ்ரீவாணி அறக்​கட்​டளை (ரூ.10,500) டிக்​கெட்​டு​கள் என அனைத்​தும் ஆன்​லைன் முன்​ப​திவு முறை அமல்படுத்​தப்​படு​வ​தால், இனி அதிர்ஷ்டம் இருந்​தால் மட்​டுமே திருப்​பதி ஏழு​மலை​யானை ஒரு பக்​தன் தரிசிக்க இயலும் எனும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு பக்​தர்​களிடையே​யும் கடும் அதிருப்தி நிலவி வரு​கிறது.


இன்று முதல் ஸ்ரீவாணி அறக்​கட்​டளை டிக்​கெட் வழங்​கும் முறை​யிலும் மாற்​றம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. அதாவது, ஒரு பக்​தர், ரூ.10,000 தேவஸ்​தானத்​திற்கு நன்​கொடை வழங்​கி, ரூ.500 டிக்​கெட் கட்​ட​ண​மாக செலுத்தி (மொத்​தம் ரூ.10,500) சு​வாமியை தரிசித்து வந்​தனர்.


இதற்​காக திரு​மலை​யில் தின​மும் 800 டிக்​கெட்​டு​களும், திருப்​பதி விமான நிலை​யத்​தில், விமான பயணி​களுக்​கென 200 டிக்கெட்டுகளும் என மொத்​தம் நாள் ஒன்​றுக்கு 1,000 டிக்கெட்டுகளை வழங்கி வந்​தது. இதற்கு பக்​தர்​களிடையே கடும் போட்டி நிலவியது.


ஆனால், இன்று (9-ம் தேதி) முதல் இது​வும் ரத்து செய்​யப்​பட்​டு, காலை 9 மணி முதல் மதி​யம் 2 மணி வரை ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்​கெட் தேவைப்​படும் பக்​தர்​கள் தங்​களது செல்​போன் மூலம் டிக்​கெட்​டு​களை ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்து கொள்ள வேண்​டும்.


பின்​னர், அவர்​களுக்கு மதி​யம் 2 மணிக்கு பின்​னர், டிக்​கெட்​டு​கள் செல்​போன்​களுக்கே அனுப்பி வைக்​கப்​படும். அதனை ‘பிரிண்ட்’ எடுத்து கொண்​டு, அதே நாள் மாலை 4 மணிக்கு சுவாமியை தரிசிக்கலாம். இது இன்று முதல் அமலுக்கு வரு​கிறது. இது​வும் அதிர்ஷ்டம் இருந்​தால்​தான் டிக்​கெட் கிடைக்​கும்.


800 பேருக்​கும் மேல் டிக்​கெட்டை முன்​ப​திவு செய்​திருந்​தால், மீதமுள்​ளவர்​களுக்​கு டிக்​கெட்​ கிடைக்​காது. இவர்​கள்​ மறு​நாள்​ மீண்டும்​ இதே​போல்​ தங்​களது அதிர்ஷ்டத்​தை சோதித்​து கொள்​ள வேண்​டும்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%