
பெரம்பலூர், ஜூலை 10-
பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தில் அய்யனார் கோவில் தேர் திருவிழா நேற்றுநடந்தது. அமைச்சர் சிவசங்கர் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தார். அப்போது தேர் அச்சு முறிந்து கருப்புசாமி தேர்மீது சாய்ந்தது. இதையடுத்து ஜேசிபி வாகனத்தை கொண்டு மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அச்சு முறிந்த தேரில் இருந்த அய்யனார், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்தி சிலைகளை மற்றொரு சகடை தேருக்கு மாற்றினர். அதில் வண்ணமலர்களால் அலங்கரித்து சுவாமியை பக்தர்கள் வடமிழுத்து வழிபட்டனர்
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், மரத்தால் ஆன அச்சுடன் கூடிய இத்தேர், முழுபாரத்தை தாங்கும் சக்தி இல்லையெனவும் இதில் உள்ள சக்கரங்கள் மிகவும் பழமையானது எனவும் ஆய்வு செய்து எச்சரித்த நிலையிலும் தேரை இழுத்ததால் தேரின் அச்சு முறிந்து விபத்து ஏற்பட்டது என்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?