அன்பின் பிறப்பு

அன்பின் பிறப்பு



ஒரு சிலுவை நாயகனின் வழி!

​கொஞ்சம் விட்டுக்கொடுத்துத் தான் பாருங்களேன்...

அகிலம் உங்களைக் கொண்டாடும்!

அந்தச் சிலுவையைச் சுமந்துதான் பாருங்களேன்...

பாரங்கள் எல்லாம் தவமாய் மாறும்!

அன்பை மட்டும் விதைத்துப் பாருங்கள் - அது

அகிம்சை வழியில் உங்களை நடத்தும்!

​தீங்கு இழைத்தவரை மன்னித்துப் பாருங்கள்,

துரோகம் செய்தவரை அரவணைத்துப் பாருங்கள்!

இதயம் திறந்து அன்பைப் பகிர்ந்தால் - அங்கு

இறைவனின் அரசாங்கம் மலரக் காண்பீர்கள்!

​சண்டையிட்டுப் பிரிந்த உறவுகளே...

மீண்டும் இணைய ஒரு வழி தேடுங்கள்!

மௌனம் காக்கும் நண்பனின் எண்ணை - இன்று

கைபேசியில் தேடித் தொடுங்கள்!

​ஒதுக்கி வைத்த உறவுகளை - மீண்டும்

ஒருமுறை நினைத்துப் பாருங்கள்!

எதிரி என்று எவருமில்லை - அந்தப்

பட்டியலை அன்பால் கிழித்துப் போடுங்கள்!

​வையகத்தில் நண்பரைத் தவிர எவருமில்லை,

எல்லோரும் நம் இரத்த உறவுகளே!

வாய் நிறையப் புன்னகை ஏந்தி - வாரீர்,

வந்தவரை எல்லாம் மகிழ்ந்து வரவேற்போம்!

​எதிரே வரும் எவரோடும் - நீங்கள்

புன்னகையால் கைகோர்த்துக் கொள்ளுங்கள்;

உங்களைச் சோதிக்க வந்த - அந்த

இறைவனாகக் கூட அவர் இருக்கலாம்!

​"உன்னைப்போல் உன் அயலானையும் நேசி!"

ஆண்டவர் சொன்ன மகா மந்திரம் இதுவே!

அவர் அவதரித்த நன்நாளில் - இதை

உணரத் துணிந்தாலே உயர்வுகள் தொடங்கும்!

​வாருங்கள் கைகோர்த்து மகிழ்வோம்!

பாலன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவோம்!

வேதனை தந்தோர்... விரக்தி அளித்தோர்...

எவருமில்லை இந்த உலகில் - இப்போது

அன்பானவர்கள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள்!

​நேசிப்போம்... நேசித்துக் கொண்டே இருப்போம்!

இந்த உலகில் நேசம் ஒன்றுதான் - என்றும்

நிரந்தரமானது... நிஜமானது!


___


ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%