வானிலை மாறுவது போல்,
சிலர் மனது மாறுவது
மாயமானதாய் உள்ளது.
இருள் சூழ்ந்த நிலையிலே
எதுவும் நடக்கலாம் என்பதை
நான் அறிவேன் —
ஆனால் இப்படி கூட நடக்குமா?
- நானே வியந்தேன்.
சமநிலை இல்லா உன் மனதில்
என் நிலை மாறிக்கொண்டே இருப்பது வியப்பல்ல.
“பேசு” என்கிறாய் —
பேசினால் மௌனமாகிறாய்.
“உன்னைப் போலதான் நானும்” என்கிறாய் —
ஆனால்
என்னை எப்படி புரிந்தாய் என்று
நான் புரிந்து கொள்ளவில்லை இப்போதும்..
நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்
மழை நின்ற பின் வரும் காற்றைப் போல
மென்மையான மழையின் ஈரம்.
ஈரம் காயவில்லை,
என் மனமும் மாறவில்லை.
அடைமழைக்கு பின்னும்
வானம் அழியவில்லை, என் நெஞ்சில்
உன் வாசம் மறக்கவில்லை.
துடிக்கும் இதயம் விடுப்பு கேட்குமா?
விடுக்கும் அன்பில் கண்கள் திறக்குமா?
இன்னும் விட்டு விட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது உன் நினைவும்
உன் வரவும்..
அந்த வகையில் அந்த வானம்
போலவே நீ
---
ஜனனி அந்தோணி ராஜ்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?