99.20 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கல் தேர்தல் ஆணையம் தகவல்
Dec 04 2025
35
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்கீழ் தமிழகத்தில் 6 கோடியே 35 லட்சத்து 99 ஆயிரத்து 698 கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரி வித்தது. இது 99.20 சதவீதமாகும். அவற்றில் 91.49 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 4 முதல் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த அக்.27 ஆம் தேதி நில வரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற் காக அதே அளவில் கணக்கீட்டு படிவங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 10,16,423 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 99.50 சதவீத படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?