23 பதவிகளுக்கு 3 அணிகள் போட்டி சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்

23 பதவிகளுக்கு 3 அணிகள் போட்டி சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்

சென்னை, ஆக. 10–


சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.


தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வரும் நிலையில், இவர்களின் நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைவதையடுத்து, அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜூலை 22ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கலில், பலரும் போட்டியிட மனு சமர்பித்தனர். தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைத் தவிர, இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், பதினான்கு கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.


தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்.


23 பதவிகளுக்கு மூன்று அணிகளின் சார்பாக மொத்தம் 69 பேர் போட்டியிடுகின்றனர். பெப்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் உமா சங்கர் பாபு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. சுமார் 2,000 உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக வாக்களித்தனர். உறுப்பினர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்போட வந்ததால் வாக்குப்பதிவு விறுவிறுப்பான நடந்தது.


நடிகை ரவீனா


நடிகை ரவீனா தாஹா கூறுகையில், ''`ரெட் கார்ட்' வழங்கப் பட்டிருப்பதால் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க விடவில்லை. `ரெட் கார்ட்' இருந்தால் போட்டியிடதான் முடியாது, வாக்களிக்கலாம் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது என்னுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது'' என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%