தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தொலைநிலை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

சேலம், ஆக. 9–
தமிழகம், மருத்துவத் துறையில் புதிய சாதனையை படைத்து, தென்னிந்தியாவிலேயே முதல்முறை யாக சேலத்திலிருந்து 340 கி.மீ., தொலைவில் உள்ள சென்னையில், தொலைநிலை ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தமிழ்நாடு அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மாநில மாநாடு TNASICON 2025-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த சிகிச்சையை, பிரஷாந்த் மருத்துவமனை குழுமத்தின் ரோபோட்டிக் அறுவைசிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் பாரிமுத்துக்குமார், சேலத்தின் தரன் மருத்துவமனையில் இருந்து, சென்னையின் வெளச்சேரி பிரஷாந்த் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்ட 45 வயது ஹெர்னியா நோயாளிக்கு தொலைநிலையிலிருந்து மேற்கொண்டார்.
1 மணி 30 நிமிடங்கள் நீடித்த இந்த சிகிச்சையில், சேலத்தில் இருந்து மருத்துவர் செயல்படுத்த, சென்னை மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைந்து பணியாற்றியது.
டிஎன்ஏஎஸ்ஐ தலைவர் பி.சுந்தர்ராஜ் பாராட்டுக்களில், “தமிழ்நாடு மருத்துவ முன்னேற்றத்தில் என்றும் முன்னணியில் உள்ளது. இந்த சாதனை எதிர்கால மருத்துவ சேவைகளுக்கான புதிய அடித்தளமாகும்” என்றார்.
பிரஷாந்த் மருத்துவமனை குழு இயக்குநர் ஜி.பிரஷாந்த் கிருஷ்ணா, “இது தொழில்நுட்ப சாதனை மட்டு மல்ல, மருத்துவத்தை பாதுகாப்பாகவும் எளிதாகவும் அணுகக்கூடியதாக மாற்றும் எங்கள் நோக்கத்தின் பிரதிபலிப்பு” என தெரிவித்தார்.
டாக்டர் பாரிமுத்துக்குமார், “தொலைஅறுவைச் சிகிச்சைகள், நிபுணர் சேவையை வரம்பின்றி வழங்கும் முக்கிய முன்னேற்றம். வலுவான டிஜிட்டல் மற்றும் மருத்துவ அடித்தளம், இரு மருத்துவமனைகளின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது” என்றார்.
தரன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் வி.செல்வராஜ், “இந்த சாதனை, நிபுணர் அறுவைச் சிகிச்சை இடப்பெயர்ச்சி தடைகளைத் தாண்டி செல்லும் திறனை நிரூபிக்கிறது. இது முழு தமிழ்நாட்டின் மருத்துவ சமூகத்திற்கும் பெருமை” என்றார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?