2025ல் மட்டும்; சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்
Jan 06 2026
23
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மிகவும் முக்கியமான ரெயில் நிலையமாக உள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயில் நிலையங்களில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையங்கள் வரும் பயணிகள், வெளி மாநிலங்களில் இருந்து ரெயிலில் வரும் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனை செய்கின்றனர். இதுபோன்ற நேரத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அந்தவகையில், சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 பேரை சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இதேபோல, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ போதைபொருள் (அபின்) கடத்தி வந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?