180 அரசு கல்லூரிகளில் 4,711 பேராசிரியர்கள்

180 அரசு கல்லூரிகளில்  4,711 பேராசிரியர்கள்

சென்னை, ஜூலை 8 -

தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வில் அரசு முறையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 180 அரசு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு 15 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் 1,500 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என வெளியான தகவல்கள் தவறானவை. உண்மையில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியாற்றுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 2015-க்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படாததால் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய அரசு 4,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால் 54 வழக்குகள் தொடரப்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி காலிப்பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 58 நிலை-I அரசுக் கல்லூரிகளில் 46 நிரந்தர முதல்வர்கள் பணியாற்றுகின்றனர். “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் 41 லட்சம் மாண வர்கள் பயன்பெற்றுள்ளனர். “புதுமைப் பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%