
பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி மனதை வேதனையடையச் செய்த சம்பவம். யாருடைய அஜாக்கிரதியினாலோ வாழ வேண்டிய பள்ளி மாணவர்கள் பலியாகி உள்ளனர். அதிலும் ஒரே குடும்பத்தில் அக்காவும் தம்பியும் பலியானது நெஞ்சை உருக்கும் தகவல். மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைய நலம் தரும் மருத்துவம். சிவப்பரிசியின் நன்மைகளை பட்டியலிட்டு உள்ளது.
நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பரிசி உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது. முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கும்.
எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா அம்பலம் சுதந்திரப் போராட்ட வீரர். பல தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தவர். சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதை இவரின் வரலாறு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
செல்போனில் உள்ள தகவல் அருமை.
குழந்தைகள் கை வண்ணம் அபாரம்.
சுற்றுலா: இயற்கை அழகு கொண்ட பனிச்சரிவு ஏரி. நீல நிரையும், சுற்றியுள்ள காடுகளின் இனிமையான பசுமையையும் கொண்டது இந்த ஏரி.
( அவலாஞ்சி). புகைப்படம் கண்ணுக்கு விருந்து.
ராணுவத்தின் உயர் விருதுகள் பெறும் அக்னி வீரர்களுக்கு நிரந்தர பணி. பாராட்டத்தக்க செய்தி.
எஸ்.அப்துல் ரஷீத்.
தஞ்சாவூர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?