12,000 ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: டிசிஎஸ் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

12,000 ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: டிசிஎஸ் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

பெங்களூரு: ​

டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் 12,000 ஊழியர்​கள் பணி நீக்​கம் செய்​யப்பட இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதுதொடர்​பாக அந்த நிறு​வனத்​துக்கு கர்​நாடக அரசு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.


இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தகவல் தொழில்​நுட்ப சேவை நிறு​வனங்​களில் ஒன்​றான டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் நிறு​வனம் 2026-ம் நிதி​யாண்​டில் தங்​களது நிறு​வனத்​தில் 2 சதவீத பணி​யாளர்​களை குறைக்க முடி​வெடுத்​துள்​ளது. இதன் விளை​வாக 12 ஆயிரத்து 200 ஊழியர்​கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.


இதுகுறித்து கர்​நாடக தொழிலாளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் கூறும்​போது, “டிசிஎஸ் நிறு​வனத்​தின் திடீர் முடிவு அதிர்ச்சி அளிக்​கிறது. 12 ஆயிரம் ஊழியர்​கள் என்​பது மிக​வும் பெரிய எண்​ணிக்​கை. இதனை தடுத்து நிறுத்​து​வது தொடர்​பாக அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளேன்.


தொழிலா​ளர் நலத்​துறை அதி​காரி​கள், டிசிஎஸ் நிறு​வனத்​தின் உயர் அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளனர். இதுத​விர, அந்த நிறு​வனத்​துடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளோம். தொழிலா​ளர் நல சட்​டத்​தின்​படி உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%