news Breaking News
clock

100 புதிய காப்பு வனங்கள் அறிவிக்கை வெளியீடு

100 புதிய காப்பு வனங்கள் அறிவிக்கை வெளியீடு



சென்னை, ஜன. - தமிழ்நாடு அரசு 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரை மாநிலம் முழு வதும் “100 புதிய காப்பு வனப்பகுதி களை” அறிவிக்கை செய்துள்ளதை ஆவணப்படுத்தும் விதமாக வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நினைவு சிறப்புப் பதிப்பை வெளியிட்டார். இந்நடவடிக்கை வனப் பாது காப்பை வலுப்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டப்பூர்வமாகப் பாது காக்கப்பட்ட நிலப்பரப்புகள் மூலம் காலநிலை தாங்குதிறனை உரு வாக்குதல் ஆகியவற்றுக்கான தொ டர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்தியா வின் தேசிய வனக் கொள்கை 1988- இன்படி, நீண்ட கால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வ தற்காக, நாட்டின் புவியியல் பரப்பள வில் 33 சதவீதத்தை வனங்கள் மற்றும் பசுமை பரப்பின் கீழ் கொண்டு வரு வது நோக்கமாகும். தமிழ்நாடு இந்த தேசிய இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக முன்னேறி வருவதுடன், தற்போது 24.47 சதவீத வனங்கள் மற்றும் பசுமைப் பரப் பைக் கொண்டு அறிவியல் பூர்வமாக மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒரு வலுவான சூழலியல் அடித்தளத்தை வழங்குகிறது. 100 வனப்பகுதிகளை காப்பு வனங்களாக்க தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள அறிவிக்கை, தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும், முன் னெப்போதும் மேற்கொள்ளப்படாத முன்னோடி முயற்சியாகவும் திகழ் கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு சுமார் 135 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு விரிவடைந்துள்ளது. திண்டுக்கல், தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல், நீல கிரி, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில், 13,494.95 ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக அறி விக்கப்பட்ட இக்காப்பு வனங்கள் பரவியுள்ளன. இவற்றுள், புதிதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் வன வட்டார மானது 2,836.33 ஹெக்டேர் பரப்பள வுடன் கூடிய மிகப்பெரிய வன வட்டாரமாகும். புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது வனத் துறை கூடுதல் தலை மைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாது காவலர் (வனத்துறைத் தலைவர்) ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்பாது காவலர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான சிறப்புச் செயலாளர் அனுராக் எஸ். மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். காப்பு வனங்களின் விரிவாக்கமா னது, ஒன்றோடொன்று தொடர்பு டைய உயிரியல் பல்வகைப் பாது காப்பையும், காலநிலை செயல்பாடு களையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டப் பூர்வமான இக்காப்பு வனங்கள் முக்கிய வனஉயிரின வாழ்விடங் களைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் வழித்தடங்களை உறுதிப்படுத்தி, நீர்நிலைகளைப் பாதுகாக்கின்றன. இதன் மூலம் கார்பன் சேமிப்பு அதி கரித்து, காலநிலை மாற்றத்திற்கெதி ரான சூழலியல் தாங்குத் தன்மை யும் மேம்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News