news Breaking News
clock

"10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து!". மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு!. போர் எதிரொலியால் அதிரடி முடிவு. வெளியான பகீர் அறிவிப்பு..!!!

"10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து!". மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு!. போர் எதிரொலியால் அதிரடி முடிவு. வெளியான பகீர் அறிவிப்பு..!!!

த்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதால், அந்நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி 10ம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய பகுதிகளில் நிலவும் அசாதாரண சூழலை ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் 7 முதல் மார்ச் 11 வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் மற்றும் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட மார்ச் 2, 5, 6 ஆகிய தேதிகளுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன; இவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

அதேபோல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 9ம் தேதிக்கு பிந்தைய தேர்வுகள் குறித்து மார்ச் 7ம் தேதி நிலைமையை ஆய்வு செய்து மீண்டும் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் கவலையிலும் பரபரப்பிலும் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%