news Breaking News
clock

மண்டபம் முகாம் ஸ்ரீ சித்தி விநாயகர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

மண்டபம் முகாம் ஸ்ரீ சித்தி விநாயகர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் அமைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் கடந்த 5-ம் மாலை 6:30 மணியளவில் விக்னேஸ்வர, தன பூஜையுடன் தொடங்கியது. 6-ம் தேதி காலை 7:35 மணியளவில் கணபதி, நவக்கிரக ஹோமம், மாலை 5 மணியளவில் கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. 7-ம் தேதி காலை 8:30 மணியளவில் 2 ஆம் கால யாக பூஜை, மாலை 6 மணியளவில் 3 ஆம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் 4 ஆம் கால யாக பூஜையும், அதனைத் தொடர்ந்து பூர்ணாஹீதி, தீபாராதனைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 10:15 மணியளவில் கடங்கள் புறப்பாடாகி, காலை 11:15 மணியளவில் கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்பாள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தலைமை அர்ச்சகர் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்பனர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி மாலா, ஆய்வாளர் மணிவண்ணன், மண்டபம் முகாம் மறுவாழ்வு துறை தனித் துணை ஆட்சியர் சாந்தி, மண்டபம் பேரூராட்சித் தலைவர் ராஜா, துணைத் தலைவர் நம்புராஜன், அறங்காவலர் மோகன்ராஜ் சந்திரன்,  இறையருட்பணி சேவகர் கணேசன், நகர் திமுக., செயலர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர், திமுக., மீனவரணி துணை செயலர் ரவிச்சந்திர ராமவன்னி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத்ராஜா, கல்வி புரவலர் சைவ. சரவணன், கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, வாசிம் அக்ரம், முஹமது மீரா சாகிப், அதிமுக., தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல துணை செயலர் எஸ்ஸார் அரவிந்த்,   முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன்  உள்பட பலர் பங்கேற்றனர். லண்டன் ஆனந்த சேகர் குடும்பத்தார்  கும்பாபிஷேகம், 

யாகசாலை திருப்பணி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News