பொங்கல் பண்டிகை : மஞ்சள் குலை, கிழங்குகள் அறுவடை தொடங்கியது

பொங்கல் பண்டிகை : மஞ்சள் குலை, கிழங்குகள் அறுவடை தொடங்கியது



திருநெல்வேலி, ஜன.- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகள், மஞ்சள் குலை, கிழங்குகள் அறுவடை தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலிட்டு வழிபடும்போது மஞ்சள் குலையும், கிழங்கும் முக்கிய இடம்பெறுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரில் மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயா ராக உள்ளன. அனவன் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இடைகால், அம்பை சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறு கிழங்கு, சேனைக்கிழங்கு, பிடி கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகள் அறுவடை செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நெல்லை டவுன் பாறையடி, சாலியர் தெரு பகுதிகளில் வியாழனன்று மஞ்சள் குலை அறுவடைப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. நல்ல விளைச்சல் இதுகுறித்து நகரப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் வழக்கமாகவே மஞ்சள் குலைகள், சேனைக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகள் பயிரிடு வது வழக்கம். மஞ்சள் குலைகள் 6 மாத பயிராகும். மற்ற பயிர்களை போலவே இதற்கும் கூலியாட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் நாங்கள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பரா மரித்த நிலையில் மஞ்சுள் குலை தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டது. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருக்கிறது.திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். பெரும் பாலான விவசாயிகள் டவுன் பகுதி யில் சாலையோரங்களில் கடை விரித்து விற்பனை செய்வார்கள். ஒரு மஞ்சள் குலை ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%