திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார வள மையத்தில், வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டிகளில் வட்டார அளவில் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் சார்ந்த கண்காட்சிகள் செயல்முறைகள், ஆய்வு கட்டுரைகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இப் போட்டியினை மாநில வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாதவன் கலந்து கொண்டு பார்வையிட்டார். மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் செந்தமிழ் மற்றும் தரணி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கருத்துரைகளை வழங்கினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசீலன் போட்டியை இணைந்து துவக்கி வைத்தார். பள்ளி அளவில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் திருவேங்கட லக்ஷ்மி நன்றியுரை கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?