காதலர் விழிகள்
நோக்கி கொண்டதாய்
விசும்பும் ஆழியும்
நோக்கி கொண்டதன்
ஒருமித்த வசீகரிப்புதான்
நீலநிற நிலைப்பாடு!
ஓயாமல் ஓடி
விளையாடும் ஒய்யாரியே!
ஆறுதல் தேடி வந்து
பாதம் நனைக்கும்
காயப்பட்ட இதயங்களுக்கு
கவரிவீசி நிம்மதி அருளும் வித்தகமே
பேரழகு!
வீசும் அலைகள்
கடல் காரிகையின்
மடியில் தவழும்
மீன்களுக்கு தாலாட்டு!
பரந்து விரிந்து
ஆழ்ந்து கிடக்கும்
புதிரான புதையலே!
புவிக்கு மட்டுமா
பூகம்பம் ஆழிக்கும்
உண்டெனத்
திமிங்கலத்தை பதுக்கி
வைத்த மாயமென்ன!
மிதந்து வரும்
தெப்பங்கள்
உலாவரும் நாவாய்கள்
கரைசேரத்துடிக்கையில் நித்திரையை மறந்து
விழிப்பையே வித்தகமாக்கிக்கொண்ட வற்றாத விசித்திரமே!
உவர்ப்புதான் உன்
கொள்கை என்றாலும்
கடலே நீ ஏழைகளின்
துயரக்கண்ணீரா
இல்லை
செல்வந்தர்களின்
ஆனந்தக்கண்ணீரா?!

கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?