செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
*நாட்டியாஞ்சலி வைபவத்துடன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்...!*
Jan 24 2026
12
வந்தவாசி, ஜன 25;
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ருக்குமாயி திருக்கோயிலின் 30 ஆம் ஆண்டை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிறகு மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் நடன கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு பரதநாட்டிய நிகழ்வுகளை நிகழ்த்தினர். மேலும் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%