தீர்ப்பு கிடைத்தது....

தீர்ப்பு கிடைத்தது....


நல்ல காலம் மௌனத்தை உடைத்தது

வெகு காலம் காத்திருந்த பின் நிம்மதி கிடைத்தது 

வலிகள் மறைந்து போய் சந்தோஷ ஒலி ஒலித்தது

இவையெல்லாம் வினாவுக்கு நல்ல விடை கிடைத்ததால் தானே... 

மனம் விரும்பிய நீதி கிடைத்ததே

அச்சத்தின் மிச்சமும் ஓடிப்போய் துச்சமாக வாழ்க்கையை எதிர் நோக்கும் துணிவு வந்ததே 

இனி விழிகளில் ஆனந்த கண்ணீர் தான் .

உண்மை மெதுவாக வந்தாலும் மனம் விரும்பியபடி வந்ததால் திண்மை கிடைத்ததே

அனைத்து இருளும் நீங்கி பிரகாச ஒளி வந்ததே

ஒவ்வொரு புதிய விடியலும் உற்சாகமானதே

நல்ல தீர்ப்பு கிடைத்ததால் வெல்லமென இனித்தது


 உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%