news Breaking News
clock

*திசையன்விளை மனோ கல்லூரியில்“உண்மைச் சரிபார்ப்பு விழிப்புணர்வு பயிற்சி”*

*திசையன்விளை மனோ கல்லூரியில்“உண்மைச் சரிபார்ப்பு விழிப்புணர்வு பயிற்சி”*



திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) சார்பில் “உண்மைச் சரிபார்ப்பு விழிப்புணர்வு பயிற்சி” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் லில்லி அவர்களின் ஆலோசனைப்படி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் (Tamil Nadu Fact Check Unit) வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

 தகவல் அறிதிறன் (Information Literacy), தவறான தகவல்களின் வகைகள் — திட்டமிட்ட பிறழ்தகவல் (Disinformation), உள்நோக்கமற்ற பிறழ்தகவல் (Misinformation), திரிக்கப்பட்ட தகவல் (Misleading Information) — ஆகியவை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும் போலிச் செய்திகளை (Fake News) எவ்வாறு கண்டறிவது, அதன் சமூக விளைவுகள், வெறுப்பு பேச்சின் (Hate Speech) தாக்கங்கள், அறிவியல் மனப்பாங்கின் அவசியம் மற்றும் இணைய பாதுகாப்பு (Cyber Safety) குறித்த விழிப்புணர்வு அம்சங்களும் விளக்கமாக கூறப்பட்டன.


நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவர் முனைவர் ஒயிட்டன் சகாயராஜ், பேராசிரியர்கள் முனைவர் ஜெயஸ்ரீ, யமுனா, முனைவர் இந்துமதி, முனைவர் ஆனந்தவேணி, முனைவர் முருகன், சுப்ரமணியன், பட்டு, சூர்யா மற்றும் மேனிஷா ஆகியோர் கலந்துகொண்டு தகவல் சரிபார்ப்பதின் அவசியத்தையும், சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.


நிகழ்ச்சியின் முக்கிய சாராம்சத்தை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் பலவேசகிருஷ்ணன் அவர்கள் எடுத்துரைத்து, “நம்புவதற்கு முன் சிந்திக்கவும்; பகிர்வதற்கு முன் சரிபார்க்கவும்” என்ற கருத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தினார். மாணவர்கள் சமூகத்தில் பொறுப்பான டிஜிட்டல் குடிமக்களாக உருவாக வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.


மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சி, தகவல் சரிபார்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு, மாணவர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News