news Breaking News
clock

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தின விழா

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தின விழா


சீர்காழி , பிப், 13 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் உள்ள சபாநாயக முதலியார் இந்து

மெட்ரிக் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தின விழா நடைபெற்றது.

இவ்விழாவினையொட்டி தாத்தாக்களுக்கு ஒரு விளையாட்டுப் போட்டியும்

பாட்டிகளுக்கு கோலப் போட்டியும் நடைபெற்றது. இரு போட்டிகளிலும்

பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலையில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி செயலர் சொக்கலிங்கம்

தலைமை தாங்கினார். பேராசிரியர் வீழிநாதன், பள்ளிக்குழு தலைவர்

சின்னையா, நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சதாசிவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கபாலி ஆகியோர் உரையாற்றினார்கள். பல்வேறு போட்டிகளில்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளியின் நிர்வாக அலுவலர் தங்கவேலு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் தங்கதுரை நன்றி கூறினார். உதவி முதல்வர்கள் கிரிஜாபாய், மாதவன், தமிழரசன், உஷா மற்றும் ஆசிரியர்கள் விழா நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இறுதியாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஒரு சிறப்பு அம்சம். பள்ளி மாணவிகளின் பாட்டிகளும் அம்மாக்களும் இணைந்து கோலாட்ட நிகழ்ச்சியை நடத்தினார்கள். திரளான பெற்றோர்களும், தாத்தா

பாட்டிகளும் இந்த விழாவில் பங்கு கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News