news Breaking News
clock

*இராஜா நந்திவர்மன் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் தொடக்க விழா..!*

*இராஜா நந்திவர்மன் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் தொடக்க விழா..!*



வந்தவாசி, பிப் 13:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும், இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய சிறப்பு முகாம் தொடக்க விழா வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரித் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி, முகாமைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை ஏடிஜிபி ஜம்புகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி பொருளாளர் எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்புரை ஆற்றினார். இத்தொடக்க விழாவில் கல்லூரி இயக்குனர்கள் எஸ்.அப்பாண்டைராஜன், ஆனந்தன், ராதா, மணி, சிவசங்கரன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன், குறும்பட துணை இயக்குநர் முகமது ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் அலகு-1, அலகு -2 என இரண்டு குழுக்களாக 100 மாணவர்கள் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டு நலப்பணித்திட்ட செயல்பாட்டை தொடங்கி வைத்தனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News