திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பண்டித ஜவஹர்லால் நேருவின் 136 ஆவது பிறந்த நாளையொட்டி, குழந்தைகள் தின விழா எரமலூர் வள்ளுவர் நிதி உதவி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வட்டார கல்வி அலுவலர் ஆர்.செந்தமிழ் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், வட்டார கல்வி அலுவலர் எம்.தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை (பொ) பத்மாவதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் ஜி.விநாயகமூர்த்தி, அ.ஷாகுல்அமீது, சமூக ஆர்வலர் முகமது ஜியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக , பண்டித ஜவஹர்லால் நேருவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் பள்ளி தாளாளர் சித்தார்த்தன் நன்றி கூறினார்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?