news Breaking News
clock

"எல்லை மீறுகிறது பாஜக!" - பொங்கியெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்! "புளித்துப்போன அரசியல்" என பதிலடி கொடுத்த அண்ணாமலை..!!

"எல்லை மீறுகிறது பாஜக!" - பொங்கியெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்! "புளித்துப்போன அரசியல்" என பதிலடி கொடுத்த அண்ணாமலை..!!

திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என்ற இந்தி வார்த்தை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மொழி ஒன்று, வரிவடிவம் மூன்று என்ற அடிப்படையில், இந்திப் பெயரையே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வைப்பது அப்பட்டமான இந்தித் திணிப்பு. பா.ஜ.க. அரசு இந்த விவகாரத்தில் எல்லை மீறிச் செயல்படுகிறது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்குப் பதிலடிகொடுத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் காட்டமான கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "தி.மு.க. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் போதெல்லாம், பழைய இந்தித் திணிப்பு என்ற கோஷத்தை கையில் எடுப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்த ஏமாற்று அரசியல் பழைய காலத்தோடு முடிந்துவிட்டது. புளித்துப் போன இந்த அரசியலை விட்டுவிட்டு, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஊழல் மற்றும் போதைப் பொருள் புழக்கம் போன்ற உண்மையான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்" என்று சாடியுள்ளார்.இந்தச் சம்பவம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதாக எதிர்க்கட்சிகள் ஒருபுறம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், மறுபுறம் தி.மு.க. முன்வைக்கும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. மக்கள் மத்தியில் நிலவும் பல்வேறு சிக்கல்களைத் திசைதிருப்பவே இந்த விவகாரங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த மோதல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%