news Breaking News
clock

Israel-Iran War Updates: 'மேற்கு ஆசிய மோதல் குறித்து கவலை'; பிரெஞ்சு அதிபருடன் மோடி

Israel-Iran War Updates: 'மேற்கு ஆசிய மோதல் குறித்து கவலை'; பிரெஞ்சு அதிபருடன் மோடி

மெரிக்கா - இஸ்ரோல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவகிறது. இந்த போரின் 6-வது நாளாக, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய இஸ்ரேல், ஜெருசலேம் பகுதி மற்றும் மேற்குக் கரையின் சில பகுதிகளில் அபாயச் சங்குகள் (Sirens) ஒலிக்கப்பட்டன. போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி சி.என்.என். (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கடற்கரைக்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவிய டார்பிடோ (Torpedo) தாக்கி மூழ்கடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் தெற்கு கடற்கரை நகரமான காலியில் உள்ள மருத்துவமனையில் 32 பேர் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. (AP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), அந்த நீர்மூழ்கிக் கப்பல் "அமைதியாக மரணத்தைத் தழுவியது" என்று கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

புதிய தாக்குதலில், குவைத் அருகே நங்கூரமிட்டிருந்த ஒரு எண்ணெய் கப்பலின் இடதுபுறத்தில் பெரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதில் நீர் புகுவதாகவும் ஐக்கிய இராஜ்ஜிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குவைத்தின் முபாரக் அல் கபீர் துறைமுகத்திற்கு தென்கிழக்கே 30 கடல் மைல் (56 கி.மீ) தொலைவில் வளைகுடா பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து, ஒரு சிறிய படகு அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதை கப்பலின் மாலுமி கவனித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%