*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் செங்கரைப்பாளையம் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோவிலில் "உலக அமைதி வாரவிழாவில்" 2- ம் நாள் நிகழ்வாக "மனவளக்கலை ஓர் மாபெரும் பொக்கிஷம்" என்னும் தலைப்பில் ஆழியாறு விசன் கல்வி இயக்குனர் முதுநிலைப் பேராசிரியர் டாக்டர் கே.பெருமாள் அவர்கள் 02.01.2026 வெள்ளிக்கிழமை மிகச்சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்.*
*முன்னதாக பேராசிரியர் ஆர்.பாலமுருகன் மற்றும் கே.பூமலர் ஆகியோர் இறைவணக்கம், குருவணக்கம், தவம் இயற்றினர்.*
*பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மனவளக்கலை பயின்ற அன்பர்கள் மற்றும் பெண்கள், ஆண்கள் என இருபால் அன்பர்களும் திரளாகக் கலந்து கொண்டு ஆர்வமுடன் சொற்பொழிவை ரசித்து மகிழ்ந்தனர்.*
*விழாவில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு வி.பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்க,*
*அறக்கட்டளை செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்க,*
*அறக்கட்டளை பொருளாளர் சி.மனோகரன் நன்றியுரை கூற,*
*உலக நல வேள்வி மற்றும் உலக நல வாழ்த்து பாடலுடன் 2-ம் நாள் உலக அமைதி வார விழா இனிதே நிறைவுற்றது*
*நன்றி! வணக்கம்!*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?