ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு அபிஷேக ஆராதனை
Sep 15 2025
109
வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு அபிஷேக ஆராதனை, அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு பகல் 12- மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 6- மணியளவில் ஸ்ரீ அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, செட்டித் தெரு வாசிகள் மற்றும் ஸ்ரீ சீதளாதேவி நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?