வதிஷ்டபுரம் கிராமத்தில் விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதற்கு நகர மன்ற கவுன்சிலர் இளையராஜா சொந்த செலவில் ரூ.30 ஆயிரம் நிதி உதவி
Sep 15 2025
62
வதிஷ்டபுரம் கிராமத்தில் விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதற்கு நகர மன்ற கவுன்சிலர் இளையராஜா சொந்த செலவில் ரூ.30 ஆயிரம் நிதி உதவி வழங்கி அசத்தினார்
திட்டக்குடி.செப்.16:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதற்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் நலன் கருதி திமுக கிளைச் செயலாளரும் கவுன்சிலர் இளையராஜா அவரது சொந்த செலவில் ரூ.30 ஆயிரம் நிதி உதவி வழங்கி இளைஞர்களுடன் மைதானம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு அசத்தியுள்ளார். இந்நிலையில் நகர மன்ற கவுன்சிலர் இளையராஜா தன் சொந்த செலவில் விளையாட்டு மைதானத்தை சீரமைத்திருப்பது அப்பகுதி இளைஞர்கள், மக்களிடையே நெழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நிதி உதவி வழங்கிய கவுன்சிலர் இளையராஜாவுக்கு அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் சார்பில் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?