வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச.30-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது. காஞ்சிபுரம், திருவரங்கம், சோளிங்கர் திருப்பதி, அயோத்தி, ஆகிய 5 திய்வ தேசத்து எம்பெருமான்கள் இத்தலத்தில் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வேங்கடகிருஷ்ணனாகவும், இருந்த கோலத்தில் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், கிடந்த கோலத்தில் போகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் எல்லா நிலையிலும் இத்தலத்தில் பெருமாள் சேவை தருவது சிறப்பு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாசதி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு விழாவின் பகல்பத்து டிச.20-ம் தேதி தொடங்குகிறது. அப்போது, ஒவ்வொரு நாளும் பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
டிச.29-ம் தேதி பகல்பத்து முடிவடைந்து, 30-ம் தேதி பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் நடைபெறும். இதையொட்டி, அதிகாலை 4.15 மணிக்கு உள்பிரகார வழிபாடு நடக்கிறது. காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது. காலை 5.30 முதல் 10.30 மணி வரை பொது தரிசனம் நடைபெறும்.
இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடும் நடைபெறும். ஜன.9-ம் தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தில் தினமும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
டிச.31 முதல் ஜன.7-ம் தேதி வரை 8 நாட்கள் மாலை 4.15 மணிக்கு பரமபத வாசல் சேவையும், 8-ம் தேதி காலை பரமபதவாசல் திறப்பும் நடைபெறும். ஜன.6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெறுகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?