நேரிசை வெண்பா!
கடின உழைப்பையே
காணும் உழவர்
கடமையைச் செய்யும்
கனிவு...படைத்திட்ட
நாளே உழவரின்
நன்னாளாம் என்றிடுவோம்
தாளாண்மை வாழ்த்தல் தக!
உழவர் நலனையே
உன்னதமாய்க் கண்டே
அழகான மேம்பாட்டை
அன்பாய்ப்..பழகியே
நல்கிடல் நன்றேதான்
நாளும் நலமாகும்
பொல்லாப்பை நீக்கல் பொலிவு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%