விருதுநகர் அருகே ஒருவர் கொலை : கொலையாளி தற்கொலை

விருதுநகர் அருகே ஒருவர் கொலை : கொலையாளி தற்கொலை

 விருதுநகரில் சைக்கிள் மீது மோதியதால் ஆத்திரமடைந்தவர் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வெட்டிக் கொலை செய்தார். பின்பு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் அருகே மத்தியசேனையைச் சேர்ந்தவர் படுகளம்(58). இவர் தனியார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் ஆட்டுக்கு இரை பறித்துக் கொண்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, விருதுநகர் அருகே உள்ள சோமசுந்தராபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லச்சாமி (57) என்பவர் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், மத்தியசேனை அருகே சென்றபோது முன்னால் சைக்கிளில் சென்ற படுகளத்தின் மீது மோதியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த படுகளம், செல்லச்சாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்லச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தநிலையில், அப்பகுதியில் இருந்த மரத்தில் படுகளம், தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%