
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள், அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி வழக்கத்தை விடக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
அதிகாலை முதலே கோயிலுக்கு வருகைதந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
6 மணி நேரத்திற்கும் மேலாகப் பக்தர்கள் வெயிலில் காத்திருக்கும் சூழல் உள்ளதால், நிழற்குடை அமைத்துதர வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?