வணக்கம் அனைத்து வாசக அன்பர்களுக்கும்.
இன்றைய ஆனந்த் பாஸ்கரில் வெளியாகியுள்ள மேற்கோள்கள் (quotes) அனைத்தும் அக்மார்க் ரகம். சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன. குறித்து வைத்துக் கொண்டேன்.
ஐ நா வின் பொதுசபையில் ட்ரம்ப் இந்தியாவும் சீனாவும் உக்ரைனுக்கு நிதி உதவி செய்வதாக குறைபட்டுக் கொண்டுள்ளார். நகைப்புக்குரிய வாதம்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் முன்வந்துள்ளது. மகிழ்ச்சிக்குரிய செய்தி.
தாதா சாகேப் பால்கே விருது மோகன்லால் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்.
ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்பாக்கெட் அடிப்பதாக அண்ணாமலை அவர்களின் குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து அவர் முன்வைக்கும் தரவுகளும் நிச்சயம் கவனத்துக்குரியவை.
மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடந்த கலைநிகழ்ச்சி பாரம்பரிய நாட்டார் கலைகளுக்கான மறுமலர்ச்சியாக விளங்குவது இனிப்பான செய்தி. ஓவ்வொரு ஞாயிறு அன்றும் நடைபெறும் என்பது ப்ளஸ் பாய்ண்ட்.
சமூக நீதி விடுதிகளில் மதமாற்றம் நடைபெறுவதாகக் கூறும் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் குற்றச்சாட்டு அரசின் கவனத்துக்கு செல்லவேண்டிய அவசியத் தகவல்.
நாமதாரியாக நிற்கும் திருப்பதிப் பெருமாளுக்கே நாமம் போட்டு உண்டியல் பணத்தைக் கூட்டுக் கொள்ளை அடிக்கிறதாம் ஒரு கும்பல். மஹா பாவம்.
கரைம் கார்னரில் வந்துள்ள செய்திகள் மூன்றும் பதற வைக்கின்றன.
மரியாதைக்குரிய தலைவர் திரு. மு. பக்தவத்சலம் அவர்களின் வாழ்க்கை தற்கால அரசியலாளர்களுக்கா ன ஒரு முன்மாதிரி. வணங்கத்தக்கவர்களான திரு. K. காமராசர், திரு. C. சுப்ரமணியம், திரு. R. வெங்கட்ராமன் ஆகிய மும்மூர்த்திகளின் ஆசியில் அன்றைய தமிழகம் சிறந்து விளங்கியது உண்மை.
திரு. மு. மதிவானன் அவர்களின் சிறிய கதை உயரிய விழுமியத்தை உரக்கச் சொல்லியுள்ளது. காலத்துக்கேற்ற கதையைப் படித்த நிறைவு எனக்கு.
தொடர்வண்டி ஓட்டுநர்களின் சவாலான பணி நிர்பந்தங்களை மிக மிக அழகாக உணர்த்தியுள்ளார் திரு. வெ. நாராயணன் அவர்கள். சிறந்த தகவல் தொகுப்புக்கு பாராட்டுக்கள்.
P. கணபதி
பாளையங்கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?