
தமிழ்நாடு இ இதழ் குழுமம்
"போரில்லா உலகம்" என்ற புனிதப் பயிருக்கு 4ஆம் பக்கத்தில் பதியமிட்டு
புதிய விழிப்புணர்வுக்கு நீர் வார்த்திருப்பது இதயம்
இனிக்கும் இன்செயல். மகிழ்ச்சி. நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.
இந்தியாவின் பாதுகாப்பு என்பது தலையாய முக்கியத்துவம் கொண்டது. அதே நேரம் பிட்ரா தீவு வாசிகளுக்கு அரசு மாற்று ஏற்பாடுகள்
செய்து கொடுத்து உதவ வேண்டும்.
2036 ஒலிம்பிக்கில் பங்குபெறும் 3000 வீரர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் நிதி உதவி என திரு. அமீத் ஷா அவர்கள் அறிவித்துள்ள செய்தி வரவேற்கத் தக்கது.
அரிசியால் புற்று நோய் கட்டுரை அதிர வைத்தது நிஜம்.
அரூர். மதிவாணன் அவர்களின் சிறுகதை "போலித் தோற்றங்கள்" மனிதனின் மன விகாரத்தை உடைத்துக் காட்டியுள்ளது. Fine.
மடிப்பாக்கம். லட்சுமி ஆவுடைநாயகம் எழுதிய "சிவ பூஜையில் கரடி" சுவையான தகவல். இசைக்கருவிகளின் வரிசையை கம்பன் கவிதையை மேற்கோள்காட்டி விளக்கியது அருமை. பாராட்டுக்கள். இம்மாதிரி கட்டுரைகளே இதழுக்கு மேலும் மெருகேற்றுகின்றன.
கொரட்டூர் பத்மாவதி அவர்களின் சங்காரத் தாண்டவம் குறித்த கவிதை நல்லதொரு படைப்பு. மகிழ்ச்சி.
கிழக்கிலங்கையிலிருந்து கடல் கடந்து வீசிய கவிதைத் தென்றல் கருத்தைக் கவர்ந்தது. "வெய்யோனின் நிழலில் மட்டும் வாய்விட்டுச் சிரிக்கும் விதியானது, கும்மிருட்டில் மட்டும் சுவரருகே ஓர் முடுக்கில் தலையணையில் முகம் புதைத்து அழுகிறது". அதீனா அபூ உபைதா அவர்களின் உருவகப் படிமம் (imagery) உலுக்கிவிட்டது. பாராட்டுக்கள்.
வழக்கம் போலவே பொட்டல்புதூரின் நெல்லைக்குரலில் முழங்கும் "அனுபவமே அஸ்திவாரம்" என்ற பூந்தமிழ் கட்டுரையின் பொலிவு விமரிசனத்திற்கு அப்பாற்பட்டு ஜொலிக்கும் வெண்ணிலவு. அதற்கு மேல் வார்த்தை இல்லை.
"மனதிற்கு சக்தி கொடுக்கும் மந்திரம்" கட்டுரை ஆசிரியர் தெரியவில்லை. சாரமான கட்டுரை இனிக்கத் தவறவில்லை.
தென்காசி. வெங்கடாசலம் அவர்களின் கடித்தில் "ட்ரம்பே அபத்தம்" என்ற வரிகள் புன்னகைக்க வைத்தது.
வாசகர் கடிதம் மூலம் புது வரவாக நமது இ இதழ் குடும்பத்தில் இணைந்துள்ள அன்பர் கோவை. சிவசங்கர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்போம். அவரது படைப்புகளை கரமேற்போம். வெல்கம் சார்!
நாளை சந்திப்போம். நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?