
மடிப்பாக்கம் லட்சுமி ஆவுடை நாயகம் " சிவ பூஜையில் கரடி" என்பதன் உண்மையான அர்த்தம் , அந்தக்கால மன்னர்கள் அரியணை ஏறும் முன் சிவபூஜை செய்யும் போது எந்தவித இடையூறும் நேராதிருக்க " கரடிகை" எனும் இசைக்கருவியை பயன்படுத்தியதாகவும், கம்ப ராமாயணம் பாடலைச் சான்றாக குறிப்பிட்டதும் அருமை. கரடிகை என்பதில்" கை" யை கை விட்டதால் "சிவ பூஜையில் கரடி" என்றால் "இடைஞ்சல் " எனத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டதாம். அரூர் மதிவாணன் எழுதிய " போலித் தோற்றங்கள்" அந்த பேருந்து நடத்துனர் ரங்கநாதன் போல வெளியுலகில் நல்லவராக இருப்போரின், " உண்மை முகம் " வீட்டில் வெளிப்படும் என்பதை உணர்த்தியது. உடலின் பிரதான பாகங்களை ஆரோக்கியமாக வைப்பதில் "லிச்சி " பழம் முலிடம் வகிக்கிறது. சளி காய்ச்சல் இருமல் போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராகப் போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பு அளிப்பதுடன், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், லிச்சி பழம் உதவுவதாக "நலம் தரும் மருத்துவம்" மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?