
85% பெண்கள் டிஜிட்டல் வன்முறையில் பாதிப்பு என்பது செய்தி. Genorosity begins at home என்று சொல்வதைப் போல Digital awareness must start from home என்று சொல்ல வேண்டியுள்ளது.
திரு. இ. பி. எஸ். அவர்கள் இப்போது உத்தமர் போல் வேஷம் போடுகிறார் என்ற சாடலுடன் அரசியல் களத்தில் அதிரடி காட்டுகிறார் கருணாஸ்.
ஆபரஷன் சிந்தூர் வண்ணப் பூ கம்பளச் சித்திரம் ஆலய வாசலில் விரித்து வைத்தவர்கள் மீது வழக்கு.
போக்குவரத்து விதி மீறல்களுக்கு கர்நாடக முதல்வரே உட்பட்டதும், ரூபாய் 2500 அபராதம் கட்டியதும் அவர் வகிக்கும் பதவிக்கு தலைக் குனிவல்லவா?
ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் தியாகம் செய்த வீரன் அழகு முத்துக் கோன் அவர்களின் வரலாறு அருமையாக வெளிச்சமிடப்பட்டுள்ளது.
சி. அருண் பரத் IRS எழுதிய "சிறிய மாற்றம், பெரிய வெற்றி" நூலின் விமரிசனமே ஒரு உற்சாக உந்து விசையை அளிக்கிறது. "ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்" என்ற உண்மை வரிகள் கவனம் பெறுகின்றன.
ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்பம் குறித்த செய்தி / கட்டுரை அனைவருக்குமான தொகுப்பாக அமைந்துள்ளது.
மேற்கு மலைத் தொடரில் 8000 அடி உயரத்தில் உள்ள கொழுக்குமலை குறித்த விரிவான கட்டுரை அருமையான தகவல்.
"பொய்க்கு பொய்யே மருந்து" என்ற முகில். தினகரன் அவர்களின் சிறுகதையில் வரும் வரிகள் - "ஓடிவந்து என்னைக் கட்டிக்கிட்டா. தப்பு நடந்து போச்சு" இதை வாசித்ததும் பிரபல எழுத்தாளர் லா. சா. ரா. அவர்களின் கதையில் வரும் "கல்யாணச் சந்தடியில் அது நடந்து போச்சு" என்ற வரிகள் என் நினைவுக்கு வந்தன.
அவரது "சர சர", "பொல, பொல" என்பது போன்ற இரட்டைக் கிழவிகளால் கட்டமைக்கப் பட்ட கவிதையான "மணற்கோட்டை" யைப் படித்ததும் நானும் "அட அட" என்று சொல்லிக் கொண்டேன்.
நாள்தோறும் நல்ல சுவைகளை இலவசமாகப் பரிமாறும் தமிழ்நாடு டாட் காம் குழுமத்தாருக்கு நன்றி செலுத்தும் விதமாக தெய்வம் இதழின் சந்தாதாரர் பரப்பினை விசாலப் படுத்தும் முயற்சியில் ஒன்றிணைந்து இயங்குவோம். நானும் உறவினர் நண்பர்கள் மத்தியில் ஸ்ரீ ராமன் முன் சிறு அணில் போல முயன்று வருகிறேன். சிறு துளி பெரு வெள்ளமல்லவா?
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?