வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 09.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 09.09.25


அன்புடையீர் 


வணக்கம் 9.9.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது இன்றைய பஞ்சாங்கம் மிகவும் அற்புதமாக இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன் மன நிறைந்த பாராட்டுக்கள் பழைய ஓய்வுதிய திட்டம் உள்ளிட்ட கோரியைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் என்று ராமநாதபுரத்தில் நடந்த செய்தி நேரில் பார்ப்பது போல் இருந்தது.


சிறுநீரகம் நம் உடலில் மிகவும் முக்கியமான பகுதி.அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல நல்ல பானங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுத்து தமிழ்நாடு பகுதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் அழகுமுத்துக்கோன் வரலாறும் வாள் ஏந்தி அவருடைய படமும் வீரத்தை காட்டுவதாக இருந்தது.


பசுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை விடுகதை மிகவும் அருமையாக இருந்தது, சமையல் அறை ஸ்பெஷல் மிகவும் நன்றாக இருந்தது ஒரு மூத்த குடிமகளிடம் பேசுவது போல நல்ல தகவல்களை கொடுத்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள் 


கணபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ நாகதேவி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் மூன்றாம் ஆண்டு பூர்த்தி விழா படத்துடன் பார்க்கும்போது புல்லரித்தது, வெட்காளியம்மன் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு வழிபாடு படமும் செய்தியும் மிகவும் அருமை.


சுற்றுலா பகுதியில் வந்த கொழுக்குமலை இயற்கையின் மடியில் ஒரு சொர்க்கம் என்று படத்தை பார்த்தவுடன் நாம் இந்த இடமெல்லாம் பார்க்கவில்லையே என்று மனதுக்குள் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவலை தூண்டியது.


பயங்கரவாத சதி வழக்கு தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என் ஐ ஏ சோதனை என்ற செய்தி நாட்டு நடப்பை அழகாக பறைசாற்றியது.


கர்நாடக முதல் மந்திரிகாக இருந்தாலும் போக்குவரத்து விதிமீறல் செய்ததால் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அபராதம் செலுத்தியதை அதிசய செய்தியாக படித்தேன்.  


475 தென் கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது என்று அமெரிக்காவில் நடப்பதை தெளிவான செய்தியாக படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது.


எல்லா பக்கத்திலும் நல்ல செய்திகளை கொடுத்து புதிய விடியலுக்கு சந்தோஷம் அச்சாரமிடும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%