
இந்தியாவுக்கு 50% வரி விதிப்பு
டிரம்ப் அதிரடி. இரட்டை இலக்கத்தில்
தமிழக பொருளாதாரம் இருப்பதாக
ஸ்டாலின் அறிவிப்பு. நைட் சிப்ட்
வேலையால் பெண்கள் அவதிப்படும்
நிலை பற்றிய கட்டுரை தரமாக
இருந்தது. திருப்பூரில் தேசிய
கொடிகள் தயாரிக்கும் பணி
தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வைகை அணையில் மூன்றாம் கட்ட
வெள்ள அபாயம். அதிமுக
மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
லேப்டாப் வழங்கப்படும். அம்மா
கிளினிக் திறக்கப்படும் என
பழனிச்சாமி அறிவிப்பு.
கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு
கவர்னர் ஒப்புதல் வழங்காமல்
ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார்.
நியூயார்க் பயணம் பற்றிய கட்டுரை
அருமையாக இருந்தது.
சின்னஞ்சிறு கோபுவின் கவிதை
நகைச்சுவையாக இருந்தது.
நாமம் போடுவது எதற்காக
என்பதன் விளக்கம் அருமையாக
இருந்தது. அமெரிக்க வரி விதிப்பால்
இந்தியாவின் பங்குச் சந்தை
பெருமளவு சரிந்தது. ராமநாதபுரத்தில்
600க்கும் மேற்பட்ட இடங்களில்
விநாயகர் வழிபாடு. அவையில்
எப்படி செயல்பட வேண்டும்
என என்னிடம் பயிற்சி எடுங்கள்
என ஜே பி நட்டா கிண்டல்.
யார் உண்மையான இந்தியர்
என்பதை கோர்ட் தீர்மானிக்க
முடியாது என பிரியங்கா அறிக்கை
எத்தனால் கலந்த பெட்ரோல்
மைலேஜ் குறைவாக கிடைக்கும்.
சபரிமலை தரிசனத்திற்கு
முன்பதிவு தீவிரமாக நடைபெறுகிறது
ட்ரம்ப் இந்தியாவுக்கு வர்த்தக
அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஏ ஐ பயன்படுத்துவதால் சிந்திக்கும்
ஆற்றல் குறைகிறது
வாசகர்களின் எண்ண ஓட்டத்தை
கடிதம் மூலமாக வெளியிடுவது
சிறப்பான செயல் ஆகும்.
அனேகமாக எல்லா பத்திரிகைகளும்
வார இதழ்களும் மாத இதழ்களும்
வாசக கடித்துக்கு என்று இரண்டு
பக்கங்கள் ஒதுக்கி விடுவார்கள்.
அந்தந்த கடிதங்கள் வாயிலாக
அதன் மெய் தன்மையை
உணரலாம். அந்த வகையில்
தமிழ்நாடு இ பேப்பர் நாளுக்கு நாள்
வெற்றிக்கொடி நாட்டி வருவது
மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?