
சீர்காழி ஆர். சீதாராமனின் 'வியாபார யுக்தி' என்ற சிறுகதையை படித்து வியந்துப்போனேன். ஆளுக்கு தகுந்தபடி பேசி பழவியாபாரம் செய்யும் மாரிமுத்து பலே வியாபாரிதான் என்று நானும் ஒரு சபாஷ் போடுகிறேன். அதோடு இந்த சிறப்பான சிறுகதையை எழுதிய ஆர்.சீதாராமனுக்கும் ஒரு சபாஷ்!
கவிஞர் பாலசந்தரின் 'பேயா?ஆத்மாவா? வேறு எதாவது???' சிறுகதையை படித்து கொஞ்சம் அதிர்ந்துப் போனேன். பிறகு குழம்பி போனேன். அதன் பிறகு சற்று பயந்துப் போனேன். திகிலான இந்த கதை புதிராக இருந்தாலும் நன்றாக இருக்கிறது.
ஆன்மிக களஞ்சியத்தில் சிவ. முத்து லட்சுமணனின் காரைக்காலம்மையார் வரலாறு தெளிவாக இருந்தது. இது ஏற்கனவே நன்கு அறிந்த கதைதான். திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. ஆனாலும் சிவ.முத்து லட்சுமணனின் உயிரோட்டமான நடையில் படிக்கும்போது சுவாரஷ்யமாக இருந்தது.
வைனவ திவ்ய கோயில்களில் ஹனுமந்த வாகனம் புறப்பாடு தரிசித்திருக்கிறேன். அதைப்பற்றிய முழு விபரங்களையும் தமிழ்நாடு இ.பேப்பர் மூலம்தான் அறிந்துக் கொண்டேன்.
'காத்திருப்பதும் ஒரு சுகம்' தான் என்பதை போயஸ்கார்டன் பொன்விழி மிக அழகாக தனது கவிதை மூலம் சொல்லியயிருந்தார். சிந்தித்துப் பார்க்கும்போது இவர் சொல்வது உண்மைதான் என்பதை உணர முடிகிறது.
நா.புவனாநாகராஜன் 'ஆடி மாதம் சிறப்புகள்' என்ற கட்டுரை மூலம் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்கமாக சொல்லியிருந்தது பாராட்டும்படி இருக்கிறது. ஆடி மாதம் பீடை மாதமல்ல. அது அம்பாள் பீடு நடை போடும் மாதம் என்று சொல்லியிருந்தது மிகச் சிறப்பாக இருந்தது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?