
02.08.2025
கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவுக்கு இந்த உலகில் யாரும்
பணக்காரராக கிடையாது.
பொட்டலம் பிரித்த பேப்பரில் கட்டம் கட்டி இருந்த இந்த வாசகத்தைப் படித்ததும் ஒரு கணம் விதிர் விதிர்த்துப் போனேன்.
காலத்தின்-- நேரத்தின் அருமையை இதை விட வேறு யாராலும் இவ்வளவு நேர்த்தியாக சொல்ல முடியாது. இந்த வாசகத்தை படைத்த மகான் யாரென்று அதில் குறிப்பிடாதது
சற்று ஏமாற்றமே எனக்கு.
நமது வாசக சொந்தங்கள் யாருக்கும் தெரிந்திருந்தால்
சொல்லி உதவுங்களேன்.
நேரம் பொன்னை விட மேலானது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நேரம் உயிர் போன்றது என்று கேட்டு அறிந்திருக்கிறேன்.
ஆனால் இப்படி நெத்தியடியாக சொல்லி இதுவரை நான் அறிந்தது இல்லை.
வழக்கம் போல் இதை
வீட்டில் அனைவரிடமும் சிலாகித்து உரையாடி
மகிழ்ந்து அது பற்றிய
விஷய பிளஸ் அனுபவங்களை குடும்ப உறுப்பினர்களிடம் ஷேர் பண்ணியது நல்ல அனுபவம்.
இதனால் என் அன்பு நட்புறவுகளுக்கு சொல்லிக் கொள்வது:
எக்காரணம் கொண்டும் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க...இது மிக மிக முக்கியம்!
கவிதைகள் அனைத்தையும் வரி விடாமல் படித்து சுவையும் கருத்தாழமும் உணர்ந்தேன்.
சபாஷ்... சபாஷ்..
வெளியாகி இருந்த இரு சிறுகதைகளும்
சுமார் ரகம் தான் என்றாலும் ரசித்தேன்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தாகூரை நமக்கு வழங்கிய வங்காளத்தைச் சேர்ந்த சரத் சந்திர போஸ் பற்றிய வரலாறு சிலிர்க்க வைக்கும் செய்திகளை அள்ளியது. ராயல் சல்யூட் சார்!
கந்தர் சஷ்டி கவசம் மேட்டர் ஜோர்...ஜோர்...
எப்பேர்ப்பட்ட கருத்துக்கள்...பலே பலே! சபாஷ் சபாஷ்!
வாசகர் வாழ்க்கைக்கு
பயனுள்ள வகையில் தேர்வு செய்து வழங்கி மகிழ்விப்பதில் தமிழ் நாடு இ பேப்பரின் மகத்துவம் மெச்சத்தக்கது.
வழக்கம் போல் செய்திகளின் தொகுப்பு சாரம் மிக்கதாக இருந்தது.
வட்டாரச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தங்களுக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும் சார்!
நாளை சந்திப்போம்!
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?