வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 04.08.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 04.08.25


பிரபாகர் சுப்பையா எழுதிய " மகுடி ஊதிய பாம்பு" - உங்க இடத்திற்கு வந்ததற்கே என்னைக் கொல்ல வருகிறீர்களே, எங்கள் இடத்தை ஆளாளுக்கு பட்டா போட்டுக் கொண்டால் நாங்கள் எங்கே போவது என பாம்பு கேட்டதாகப் படித்ததும், 

    வாட்ஸ் அப் ல ஒரு பூனை குறுக்கே போனதாக, சலித்துக் கொண்ட நபரிடம், பூனை திரும்பி நின்று, என் இரையைத் தேடி நான் போகும் போது , நீங்கள் குறுக்கே வந்தால் என்றைக்கேனும் சலித்து கொண்டிருக்கிறேனா? எனக் கேட்டதாக வந்த செய்தி நினைவிற்கு வந்தது.


பிரண்டை மாதவிடாய் பிரச்சினையை சீராக்கும்


குப்பைமேனி சாற்றைத் தலையில் தடவினால் தலைவலி நீங்கும்,

சாற்றைக் குடித்தால் சளி, இருமல் நீங்கும் 

இலையை அரைத்து காதோரம் தடவினால் காது வலி நீங்கும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.


   "கவியரசர் கண்ணதாசன் தரும் கம்பரசம்" பற்றி பானுமதி நாச்சியார் எழுதியதும் , தியாகம் படத்தில் " நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு" பாடலில் , " நதியின் பிழையன்று நறும்புனலின்மை" எனும் கம்பராமாயண வரிகளை, "நதி வெள்ளம் காய்ந்து விட்டால் , நதி செய்த குற்றமில்லை, விதி செய்த குற்றமன்றி வேறு ஏதம்மா? என இடைவரிகளாக, எளிமையாக எழுதியது நினைவிற்கு வந்தது .


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%