
அமெரிக்க அதிபராக ட்ரம்ப்
பொறுப்பேற்றதிலிருந்து ஒரு நாளைக்கு எட்டு இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரம் கவலை அளிக்கிறது. இந்தியர்களைப் போன்று பல நாட்டினரும் தினமும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இப்படி அன்னிய நாட்டினரை அடாவடியாக வெளியேற்றினால் அமெரிக்க பொருளாதாரம் உயர்ந்துவிடும், கஜானா நிறைந்து விடும் என்று தப்புக் கணக்கு போடுகிறார்
ட்ரம்ப்,
இதனால் பல கம்பெனிகள் நலிவடைந்து லாபத்தை இழந்து அதன் காரணமாக
அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காணும்.
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படையே அந்த நிறுவனத்தின் ஆள்
பலம் ஆகும். அமெரிக்காவின் ஆள் குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ந்து விட்டது.
முதலமைச்சர் ஸ்டாலினும்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக போட்டி போடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி
ஊர் ஊராக சென்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கடுமையாக சாடி இருக்கிறார் ஸ்டாலின்.
" அரசியல் வியாபாரம் "
சிறுகதை படித்தேன். இன்றைய காலகட்டத்தில்
அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்ட வேண்டும் என்றால்
அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தின் ஒரு பகுதியை பல்லாயிரம் பேருக்கு கூலியாகவும், பிரியாணி பொட்டலங்களாகவும், மது பாட்டில்களாகவும் வழங்க வேண்டும்.
தேர்தல்களும், பேரணிகளும் பொதுக் கூட்டங்களும் ஊழல் மூலம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தின் ஒரு சிறு பகுதியை கடைநிலை மனிதனுக்கும் கொண்டு சேர்க்கும் கருவியாக விளங்குகின்றன.
நேபாளத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளில் இந்தியர்களின் எண்ணிக்கை முன்னணியில் இருக்கிறது என்று புள்ளி விபரம் கூறுகிறது.
நேபாளம் ஒரு இந்து நாடாக இருப்பதால் அங்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை
அதிகமாகத்தான் இருக்கும்.
" ஒரே பாரதம் உன்னத பாரதம் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜராஜ சோழன் " என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
ராஜராஜ சோழன் தான் மேற்கொண்ட அத்தனை போர்களிலும் தானே போரை முன் நின்று நடத்தி இருக்கிறார். போர் நிறுத்தத்துக்கு வேறு நாடுகள் தாங்கள்தான் போர் நிறுத்தத்துக்கு காரணம் என்று சொல்லவில்லை.
*******
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?