வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி ) 12.08.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி ) 12.08.25


நமது தமிழ்நாடு இ பேப்பர் குழுமத்திலிருந்து " Tea Boy "

என்ற அச்சு இதழ் வெளிவரப்

போகும் செய்தி தேனாய் இனித்தது. புதிய இதழ் மக்களின் பேராதரவுடன் பீடு நடை போட வாழ்த்துகள் !


இந்தியா பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணையை வாங்கி வருகிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கிறது அமெரிக்கா.

அதன் காரணமாக தன்னுடைய விற்பனையை நடத்துவதற்கு உலக சந்தையின் விலையை விட குறைந்த விலையில் கச்சா எண்ணையை விற்பனை செய்கிறது ரஷ்யா.


இந்தியா அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது.

இப்படி குறைந்த விலையில் ரஷ்ய நாட்டிடம் இருந்து வாங்குவதால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த லாபம் மட்டும் 1,49,989 கோடிகள்.


ஒருவர் எந்த கடையில் சாமான்களை வாங்குவது என்று தீர்மானிப்பது அவரது சொந்த விருப்பம் ஆகும்.

எனது கடையில் தான் சாமான்களை வாங்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது.


அதைப் போலத்தான் அமெரிக்காவும் ரஷ்யாவிடம் இருந்து யாரும் பொருட்களை வாங்க கூடாது என்று கூறி உலக நாடுகளை பயமுறுத்துகிறது. விரைவில் அமெரிக்காவின் இந்த முட்டாள்தனமான பிடிவாத போக்கு உடைந்து போகும்.


அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி சையது ஆசிம் முனிர் " சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை ஏவுகணைகள் மூலம் தகர்ப்போம் " என்று பேசியிருக்கிறார். 


தனது நாட்டுக்கு வந்திருக்கும் ஒரு நாட்டின் ராணுவ தளபதி மற்றொரு நாட்டின் மீது இவ்வளவு காட்டமான

அறிக்கை விடுவதை அமெரிக்கா கண்டிக்காமல் ரசிக்கிறது என்பதுதான் உண்மை.


தமிழகத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளையும் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் வண்ண வண்ண புகைப்படத்துடன் வெளியிட்டு ஊக்கப்படுத்தும் தமிழ்நாடு இ பேப்பரின்

பணி இதுவரை கேள்விப்படாதது. தொடரட்டும் இந்த நற்பணி !


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%