வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 16.08.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 16.08.25



நான் திரும்பத் திரும்ப தெய்வம் இதழ் பற்றி கூறுவதாய் யாரும் 

சிலாகிக்கவும் வேண்டாம்..சந்தேகிக்கவும் வேண்டாம்...

சமநிலையில் இருந்தால் போதும். சொல்லி வைத்தாற் போல் வருகின்ற

அனுபவங்களும்

அடி மனதில் ஊற்றெடுக்கும் உண்மையான உணர்வுகளும் தான் இப்படி எழுத வைக்கின்றன.

கவிஞர் எம்.பி.தினேஷ்

தன் கவிதையில் தமிழ் நாடு இ பேப்பரின் சிறப்புகளை மிக இயல்பாகவும் இலகுவாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரித்திருந்தார்.

அதைப் படித்து முடித்ததும் நூற்றுக்கு நூறு சரி என்று சொல்லத் தோன்றியது எனக்கு.

அந்தக் கவிதையில் வாசகர் கடிதத்தையும் அவர் விட்டு வைக்க வில்லை. அவரின் ஆழ்ந்த வாசிப்பு ஞானம் வெளிப்பட்டது.

வாசகர் கடிதம் பற்றி என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?

உணர்ச்சி மிகுந்ததாக கடிதங்கள் இருக்கின்றன என்று துல்லியமாக உணர்ந்து வெளிப்படுத்திய அவரின் திறமைக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த அளவுக்கு வாசிப்பு வளமையும் 

பாராட்டி மகிழும் பண்பும் நம் வாசக சொந்தங்களுக்கு வசப்பட்டிருப்பது என்பது பெரிய விஷயம். சந்தோஷமாக இருக்கிறது.

இந்த இனிய நற்குணம் எல்லோரிடமும் சுடர் விட்டு பிரகாசிக்கும் போது அதன் விளைவு

ஆக்கப் பூர்வமாக...

ஏன் சரித்திர நிகழ்வாகக் கூட அமையும் என்பது நிச்சயம்.

ஆகவே, அன்பான வாசக சொந்தங்களே...

தமிழ் நாடு இ பேப்பரின் வளர்ச்சிக்கு 

அனைவரும் ஒன்று திரண்டு நிற்போம்.

ஒரு புதிய சகாப்தம் படைத்து காட்டுவோம்.


அணு ஆயுத மிரட்டலை 

இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி.


இன்னொரு இரும்பு மனிதர்! இந்த நேரத்தில் இந்தியா வுக்கு இத்தகைய உறுதி மிக்க தலைவர் 

இல்லாது போயிருந்தால்...

நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

கடவுளுக்கு நன்றி சொல்வோம்!


கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர்.

அடுத்த வருடமும் நானே கொடியேற்ற வேண்டும் என்று குல தெய்வத்திடம் மனதுக்குள் வேண்டியிருப்பார்.

அப்படித்தானே?


பாஜக வில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

எதிர் பார்த்தது தானே?

நலம் தரும் மருத்துவம் பகுதியில் தூக்கம் பற்றிய கட்டுரை அற்புதம். இதுவரை தெரியாத செய்திகள்..

இந்தப் பகுதி மிகவும் பயனுள்ளது என்று எத்தனை தடவை வேண்டுமானாலும் சொல்லலாம்!

தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் 

பயன்படுத்த தடை.

அறநிலையத் துறை உத்தரவு.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை தான் போங்க!

சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸ் 

ரூ50000ல் இருந்து 15000 ஆக குறைத்தது 

ஐசிஐசிஐ வங்கி.

வாடிக்கையாளர்கள் இப்போது அப்பாடி என்று மன ஆறுதல் பெற்றிருப்பார்கள்.

யோசித்துப் பார்த்தால் 

இது ஒரு வகையான உளவியல் ரீதியான உத்தி! எப்படியோ 

யானை குதிரை மட்டத்துக்கு வந்ததே...

அந்த அளவில் சந்தோஷமே!

சுதந்திர தினத்தன்று ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்.

இவர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைத்த பாடில்லையே!

கச்சத்தீவை மீட்டால் ஒரு வேளை கிடைக்கலாம்.

மீனவர்களின் இந்த அவல நிலை தீர ஆண்டவனை பிரார்த்திப்போம்!

இரவல் வேண்டாம் 

குப்பைக்கு குட்பை

இரு சிறுகதைகளும் காரம் போக வில்லை ரகம்! பாராட்டுக்கள்!

தில்லையாடி வள்ளியம்மை வரலாறு...அடடா...

இரு முறை படித்து இதயம் சிலிர்த்தேன்.

மகாத்மாவுக்கே உந்து சக்தியாக இருந்த உயர்ந்த உள்ளம்!

வாசகப் பெருமக்கள் 

படித்துப் படித்து பரவசம் காணும் 

மகா காரியத்திற்கு காரணமாக விளங்கும் தமிழ் நாடு இ பேப்பர் 

வாழ்க வாழ்க 

வளர்க வளர்க!

எல்லாம் வல்ல இறைவனை இறைவனை அனைவரும் வேண்டுவோம்.

வெற்றி பெறுவோம்!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%