வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 16.08.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 16.08.25


அருள் தரும் தெய்வம் தனி இதழ் ரூ 20.

நேற்று எனக்கு தபாலில் வந்திருந்த 

தெய்வம் பத்திரிகையை விடுமுறை ஆதலால் 

நிதானமாக பிரித்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

அட்டை டூ அட்டை அற்புதம்... அற்புதம்!

இது வெறும் புகழ்ச்சி இல்லை. இருபது ரூபாய்க்கு இத்தனை பக்தி மணம் கமழும் கனமான கற்கண்டு 

சுவை திரட்டா?

புத்துணர்வு கிட்டியது.

கூடவே நம்பிக்கை ஒளி உள்ளம் முழுவதும் ஒளிர்ந்து 

உவகை கொள்ள வைத்தது.

இந்த இனிய அனுபவத்தை உடனே அலைபேசியில் தொடர்பு கொண்டு நான்கு பேரிடம் ஷேர் செய்தேன். அவர்களும் என் உள்ளுணர்வில் சங்கமித்து, சந்தா வுக்கு ரெடியானது 

குதூகலத்தைத் தந்தது.

நமது வாசக நட்புகள் யாரும் மிஸ்ஸாகாமல் 

தெய்வத்தை தத்தம் வீடு தேடி வருமாறு ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகோள். சரி,

இன்றைய பேப்பர் மேட்டருக்கு வருவோம்!


அணு ஆயுத மிரட்டலை 

இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி.


அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை களின் பாதிப்பு பிரதமர் உரையில் எதிரொலிக்கிறது.

இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்.

போருக்கான காலம் இதுவல்ல என்று முழங்கிய பிரதமர் 

மீண்டும் இதே கோஷத்தை வலியுறுத்தி பயணிக்கும் ஆரோக்கியமான சூழ்நிலை சீக்கிரம் உருவாக வேண்டும்.

பிரதமர் உரையில்,

' அரசியலமைப்பு சட்டம் 

ஒரு வழி காட்டும் கலங்கரை விளக்கமாக நின்று நமது பாதையை ஒளிரச் செய்து வருகிறது.' என்று கூறியது அர்த்த அடர்த்தி கொண்டது.


நடிகை கஸ்தூரி பாஜகவில் ஐக்கியமானது அப்படி ஒன்றும் பெரிதான அதிர்வலையை உண்டாக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வேளை தம்பித்துரை விலகல் என்று புரளி கிளம்பியது இல்லை கிளப்பிவிடப் பட்டது காரணமாக இருக்கலாம்!


நலம் தரும் மருத்துவம் பகுதியை எப்போதும் 

கவனமாக படிக்கிறேன். காரணம் 

நுட்பமான தகவல்கள்.

தூக்கம் பற்றிய கட்டுரையில், ஆழ்ந்த உறக்கம் மிதமான உறக்கம் விழிப்பு இந்த மூன்றும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இது வரை தூக்கத்தில் இப்படியொரு பிரிவுகள் இயல்பாக இருப்பது தெரியாதே!

தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுவினருக்கு இந்த பகுதிக்காக ஸ்பெஷல் நன்றிகள்!

கிருஷ்ண ஜெயந்தி கட்டுரை நல்ல வளம்.

மிகவும் சிறப்பு!

தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தில்லையாடி வள்ளியம்மை வரலாறு திகைக்க வைக்கிறது. பதினாறு வயதில் இப்படி ஒரு புனித சாதனையா?

இரு கை கூப்பி வணங்கத் தோன்றியது நிஜம்!

கவிதைப் பக்கங்கள் 

அப்பப்பா...கேட்கவே வேண்டாம்... எப்போதும் போல் கன கச்சிதம். வரி விடாமல் படித்துப் படித்து பரவசமானேன்...

தினந்தினம் புத்தம்புது அனுபவங்களை அள்ளித் தரும் தமிழ் நாடு இ பேப்பரின் சாதனைகள் சரித்திரம் ஆகும் நாள் தொலைவில் இல்லை.

வெகு விரைவில் என்பது நிச்சயம்...

நிச்சயம்!

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%