'வெற்றிப்பாதை நீண்ட மற்றும் கடுமையானது. எனினும் வெற்றி இல்லாமல் உயிர் வாழ முடியாது.' என்றார்
சர்ச்சில்.
சர்ச்சில் சொன்னதில் முதல் பாதி சாதாரணம் தான். அதாவது நம்மில் பலருக்கும் தெரிந்த எதார்த்தம் என்பதற்காகத் தான் சாதாரணம் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியதாயிற்று.
பிற்பாதி வாசகம் மிகவும் உயர்வானது.
உன்னதமானது.
வெற்றி இல்லாமல் உயிர் வாழ முடியாது.
ஆழ்ந்த யோசிப்பின் வெளிப்பாட்டில் தான் இப்படிப்பட்ட வீர்ய மிக்க கருத்தாக்கம் பிறக்கும்.
எவ்வளவு தீர்க்கமான வார்த்தைகள்..
குகைகளில் காடுகளில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று காட்டுமிராண்டிகளாய்
வாழ்ந்த...இது கூட சரியான வார்த்தை இல்லை... காரணம் வாழ்தல் என்பது வேறு பிழைத்தல் என்பது வேறு அல்லவா?
ஆமாம்...பிழைத்துக்
கொண்டிருந்த (பிழைப்பு என்றாலே பிழை செய்தல் என்று அர்த்தம்)மனித குலம்
இன்றைய வளர்ச்சி நிலையை எட்டுவதற்கு... இன்னும் பல நிலைகளைக் கடந்து வளரப் போவதற்கு முக்கிய மூல காரணமாகவும் உந்து சக்தியாகவும் இருப்பது... என்று சர்ச்சில் வாசகத்தை விவரித்துக் கொண்டே போகலாம்...அவ்வளவு ஆழமும் அர்த்தமும் அதனுள் பொதிந்திருப்பதை
தமிழ் நாடு இ பேப்பரின் மதிப்பு மிக்க வாசகர்கள் நிச்சயம் உணர்ந்து
ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இதை கடிதத்தின் முதல் கருத்தாக முன் வைத்ததற்கு காரணம் உண்டு.
வெற்றிப்பாதை நீண்டது மற்றும் கடினமானது தான்...
இதை வாழ்க்கையில் புரிந்து கொண்டு பயணித்தால் வாழ்க்கை முழுவதும் இன்பமயமே...
கண்ணீரும் காயங்களுமாய் இருந்தாலுமே, இந்தப் பயணம் வெற்றிகரமானதே!
இணையதளத்தில் இங்கே இதுவரை யாரும் செய்யாத செய்ய முன்வராத
சவாலான காரியத்தை தமிழ் நாடு இ பேப்பரின் தலைமை ஆசிரியர் ஆர்வமுடனும் ஆனந்தத்துடனும் எடுத்து, இடையறாமல்
இயங்குகிறார் என்றால் என்ன காரணம்...
எளிதில் கிடைக்கும் வெற்றியில் வெற்றி இல்லை என்பதில்
தெளிவுடனும் திண்ணியமுடனும்
இருக்கிறார் என்றே அர்த்தம்!
ஒரு புரட்சி கவிஞன் சொல்லுவான்...
நான் சுறாமீனின் ஆபத்தில்லாத கடலில்
படகை செலுத்த மாட்டேன்.
இப்படி மாத்தி சிந்தித்து செயல்படும் மனிதன் தான் விரைவில் வரலாறாகிறான்.
நம் தமிழ் நாடு இ பேப்பரும் ஆசிரியர் குழுமத்தினரும் இங்கே வரலாறு படைக்கப் போவது உறுதி... உறுதி!
வழக்கம் போல் வரி விடாமல் கவிதைகளை வாசித்து மகிழ்ந்தேன்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதி
நெஞ்சம் சிலிர்க்கிறது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வரும் தகவல்களை தொகுத்து தமிழ் நாடு இ பேப்பர் ஒரு நூல்
வெளியிட்டால் என்ன?
பயனுள்ள புத்தகமாக
வாசகர் கரங்களில் புழங்க வாய்ப்பு கிடைக்குமே!
ஆசிரியர் குழுமத்தாரின் பரிசீலனைக்காக இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன்.
அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாக திகழ்கிறது தமிழ் நாடு இ பேப்பர்.
இதற்கு வாசகராகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வாசகர்
திரும்பத் திரும்ப கேட்டிருந்தார்.
இப்போது எனக்கும் அந்த குற்ற உணர்ச்சி
அடிக்கடி எழுகிறது.
நாம் பெறுபவர்களாக இருக்கிறோம்.
கொடுப்பவராக இல்லையே..!
இ பேப்பருக்கு இவர்கள் சந்தா கேட்கிற மாதிரி தெரியவில்லை....
அப்படி யென்றால் வேறு வழி?
அருள் தரும் தெய்வம் இதழுக்கு நம் வாசக சொந்தங்கள் அனைவரும் சந்தா கட்டி ஆதரவு அளிக்கலாமே..
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பர்களே!
அந்த நண்பர் குறிப்பிட்டது தான் ஞாபகத்துக்கு வருகிறது.
Life is to give, not to take!
பி.சிவசங்கர்
கோவை